shabd-logo

மழை

30 April 2024

30 Viewed 30
BreakingNews 🔥🔥🔥

இரவு 8 மணி.  

"அனைவரும் உடனடியாக வீட்டுக்குள் சென்று பதுங்கி கொள்ளுங்கள்" என்ற அறிவிப்பு சமூக வலைத்தளங்கள் எங்கும் காண முடிந்தது. 

     கடைக்கு சென்றிருந்த நான்  பொருட்கள் எதுவும் வாங்காமல் உடனடியாக வீட்டுக்கு வந்து கதவுகளை பூட்டி கொண்டேன்.

   என்ன செய்தி என்று தெரிந்துக்கொள்ள தொலைக்காட்சியை பார்த்தால் breaking news ஓடிக் கொண்டிருந்தது. "மக்கள் உடனடியாக வீட்டுக்கு சென்று பாதுகாப்பாக இருக்கவும் ஏனென்றால்".... 

இவ்வளவு தான் பார்த்தேன். மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

 இருள் சூழ்ந்தது.

  சமூக வலைத்தளங்களிலும் எந்த விளக்கமும் இல்லை. சரி.. மின்சாரம் வந்த பிறகு டிவி பார்த்து தெரிந்து கொள்ளலாம் என சாப்பிட உட்கார்ந்தேன்.

  திடீரென்று வானத்தில் இருந்து ஒரு தீப்பிழம்பு பூமியில் எங்கோ விழுந்தது. பகல் நேர வெளிச்சம் வீட்டினுள்ளே ஒரு நொடி வந்து சென்றது.  ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். ஊர் மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக  வானத்தை பார்த்தபடி நின்றிருந்தனர். ஒரு வயதானவர்,  "எல்லோரும் வீட்டிற்கு செல்லுங்கள்" என சத்தம் போட்டார். 

சில நொடிகள் தான் கடந்திருக்கும்... காது செவிடாகும் அளவுக்கு வானிலிருந்து ஒரு வெடி சத்தம். அனைவரும் வீட்டுக்கு சென்று ஒளிந்து கொண்டனர். 

         நான் இந்த நிகழ்வு   என்னவென்று தெரிந்து கொள்ள Google ஐ தேடினேன். அது, இது தான்  "இடி மின்னலுடன் கூடிய மழை"  வருவதற்கான அறிகுறிகள் என பதில் சொல்லியது.

எனது பயம் நீங்கியது. பின்னர் தான் மழை என்றால் என்னவென்று Google ஜ பார்த்து தெரிந்து கொண்டேன்.

      _ அப்துல் ஹலீம்
3058 ஆம் ஆண்டு August மாதம் 31 ஆம் தேதி, செவ்வாய் கிழமை.

ஆம். கடந்த ஆயிரம் வருடங்களாக மக்கள் மழையை பற்றி கேள்விப்பட்டது கூட இல்லை ..

மலைகளை வெட்டாதீர்கள், மரங்களை நடுங்கள். இல்லாவிட்டால், வரும் சந்ததிகள், இதே போல் மழையை பயம் கலந்த ஆச்சரியத்துடன் பார்க்கும் காலம் வரலாம்.