shabd-logo

சொல்லாத காதல்

24 April 2024

16 Viewed 16

வணக்கம்

              நான் அப்துல் ஹலீம். தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த ஒரு இசைக் கலைஞன். கின்னஸ், லிம்கா என பத்து உலக சாதனைகளை படைத்து உள்ளேன்.

சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை உலக சாதனை படைக்க வைத்துள்ள எனக்கு அமெரிக்க கெண்டகி மாநில அரசு
"கெண்டகி கொலோனல்" விருதினை வழங்கி கவுரவித்தது. ஜார்ஜியா நாட்டு அரசாங்கம் "நைட்" எனும் விருதினை தந்து கவுரவித்தது.

எனது முதல் காதல் ...

        பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் இறுதி நாள். அவளை காண்பதும் அன்றே இறுதி என்று நான் அறிந்திருக்கவில்லை..

அதன் பிறகு சூழ்நிலை காரணமாக வேறு பள்ளிக்கு செல்லும்படி நேர்ந்தது.
பிறகு கல்லூரி படிப்புகள் சிதம்பரம், கொச்சி, தஞ்சாவூர் என வெவ்வேறு ஊர்களில்.

ஆனால் என்றும் என் மனதில் அவளே நிறைந்திருந்தாள்.. 

புதிதாக பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்கள் வந்த நேரம். சமூக வலைத்தளங்கள் முழுவதும் அவளை  தேடினேன். என் கண்களுக்கு அவள் புலப்படவே இல்லை ..

சில வருடங்களுக்கு முன்பு அவளை பேஸ்புக்கில் பார்த்தேன். தொலைந்து போன வைரத்தை கண்டெடுத்தது போன்று  மகிழ்ந்தேன். 

நட்பு அழைப்பு விடுத்தேன். பல மாத காத்திருப்புக்கு  பிறகு பேஸ்புக் நண்பனாக என்னை ஏற்றுக் கொண்டாள். ஆனால் ஒரு பேரிடி. ஆம். அவளுக்கு திருமணமாகி இருந்தது. 

பிறகு அவளது வாட்சப் எண் வாங்கி வெறும் நண்பர்களாக பல நாட்கள் நலம் விசாரித்தோம்.

திடீரென்று ஒரு நாள் அவள் என்னுடன் பேசுவதை நிறுத்தினாள். ஒரு நாள் பேஸ்புக்கிலிருந்தும் எனது நட்பை துண்டித்தாள். காரணமும் அவள் சொல்லவில்லை. அன்றிலிருந்து இன்று வரை எதற்காக என் நட்பை துண்டித்தாள் என யோசித்து கொண்டிருக்கிறேன், அவள் நட்பில்லாத அனாதையாக.  

இனி நடந்த சம்பவங்கள் கவிதைகளாக.

ஏனோ தெரியவில்லை. சில நாட்களுக்கு முன் வாட்சப்பில் என் எண்ணை முடக்கிவிட்டாள். பின்னர் என்னால் அவளை தொடர்பு கொள்ள இயலவில்லை..

அப்போது எழுதியது...

மறக்காதே அன்பே...

மறுக்காதே என்னை..

முடக்காதே எண்ணை..

பிரியாதே பெண்ணே.. 

மாறாதோ எண்ணம்...

சேராதோ எண்ணும்...

மறு ஜென்மம் வந்தால்..

சேருவோம் அந்நாள்...

- அப்துல் ஹலீம்

ஒரு முறை எனது அலைப்பேசியில் அவளது எண்ணை பார்த்த போது தோன்றிய எண்ணம்....இதோ.

கைப்பேசியில் ..

அழிக்கவும் முடியாமல்..

அழைக்கவும் முடியாமல் 
சில எண்கள்...

நெஞ்சத்தில் ..

கலைக்கவும் முடியாமல்..

களையவும் முடியாமல் 

பல எண்ணங்கள்..

- அப்துல் ஹலீம்

சில நாட்கள் கடந்தன.
பேஸ்புக்கில் மீண்டும் நட்பு அழைப்பு விடுத்தேன். எனது நட்பு அழைப்பை அவள் ஏற்கவில்லை.  அவள் என்னை நண்பனாக கூட ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள். வெறுப்பையே தருகிறாள்.

அன்பைத் தா வாங்குகிறேன்...

அதுவே என் எதிர்காலம்...

நட்பைத் தர வேண்டுகிறேன்..

இதுவே எனது முடிவாகும்...

வெறுப்பைத் தரத் தாங்குகிறேன்..

ஏன் இந்த
பிடிவாதம்?

- அப்துல் ஹலீம்

பள்ளிக் காலத்தில் என் காதலுக்கு தூது சென்றான் எனது நண்பன். இன்றோ, அவளது நட்பு வேண்டி தூது சென்றாள் என் தோழி. 
ஏனோ மறுக்கிறாள்.

அன்று தூது சென்றான் என் தோழன்...

அவள் காதலை மறுத்தாள்.. 

இன்று தூது சென்றாள் என் தோழி..

அவள் நட்பையும் மறுத்தாள்.. 

என்றும் காத்து நிற்கும்..
என் காதல்..

இனியும் என்னை
மறுத்தால்..

- அப்துல் ஹலீம்

எனது நட்பை கூட அவள் ஏற்றுக் கொள்ள மறுத்த போது எழுதியது.

உன்  இதயம் 
கல்லானதால்

என்  நெஞ்சம் 
புண்ணானதே

உன் இதயம்  என்று
மலராகுமோ?

அன்று  நான்
மகிழ்வாவேன்

அது  வரை  நான் 
காத்திருப்பேன்

இல்லையேல்  கடலில்
கரைந்திருப்பேன் 

- அப்துல் ஹலீம்

நான் ஒரு இசைக் கலைஞன். இன்று அவளது நட்புக்காக இசையை துறக்க கூட தயாராகி விட்டேன்...

இசையைத் துறக்கிறேன்...

அவளிடம் இரக்கிறேன்...

நட்பை யாசிக்கிறேன்... 

அவள் மறுப்பை மறுக்கிறேன்...

மறுத்தால் இறக்கிறேன்...

வாழ்வதை  வெறுக்கிறேன்...

- அப்துல் ஹலீம்

பல வருட பயிற்சி எடுத்து இசைக் கலைஞனாக என்னை நான் உருவாக்கி கொண்டேன். என்னை கவிஞனாக்கிய பெருமை அவளையே சாரும்.  

நான் என்னைக் கலைஞனாக்கினேன் ...

அவள் என்னைக் கவிஞனாக்கினாள்..

நான் என்னை மனிதனாக்கினேன்.. 

அவள் என்னை மடையனாக்கினாள்..

- அப்துல் ஹலீம்

குறிப்பு : 

நான் இந்த கதையிலும் கவிதையிலும் யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லை. அத்தனையும் கற்பனையே.

தங்கள் மனம் புண்  பட்டிருந்தால் என்னை தயவு மன்னித்துவிடுங்கள்.

இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள,
அப்துல் ஹலீம்.

1
Articles
சொல்லாத காதல்
0.0
காதல் கடிதம்